டெல்லி : வரவிருக்கும் 'iQOO 16' (iQOO 16) ஸ்மார்ட்போன் குறித்த பல முன்னணி ஃபிளாக்ஷிப் (Flagship) அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. பிரபல டிப்ஸ்டரான (Tipster) 'டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்' (Digital Chat Station - DCS), சீன சமூக வலைதளமான வெய்போ (Weibo) மூலம் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, ஒரு பெரிய பேட்டரி, கேமிங் சிப் மற்றும் சிறந்த ஆடியோ சிஸ்டம் என அசத்தலான ஹார்டுவேர்களுடன் இந்த போன் தற்போது சோதனை கட்டத்தில் (Engineering Prototype) உள்ளதாகக் கூறப்படுகிறது.
ப்ராசஸர் மற்றும் கேமிங் (Processor & Gaming):
சிப்செட்: iQOO 16 ஸ்மார்ட்போனானது, குவால்காமின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) சிப்செட்டைக் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமிங் சிப்: கேமிங் அனுபவத்தை மெருகேற்ற, இதில் ஒரு பிரத்யேக கிராபிக்ஸ் சிப் (Dedicated graphics chip) மற்றும் அதிவேக ரெஃப்ரெஷ் ரேட் (Ultra-high refresh rate) வழங்கப்பட உள்ளது.
பிரம்மாண்ட பேட்டரி: ஸ்மார்ட்போன் சந்தையையே மிரள வைக்கும் வகையில், இதில் மிகப்பெரிய 8,500mAh பேட்டரி இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஸ்ப்ளே: கேமிங் மற்றும் வீடியோக்களுக்கு ஏற்ற வகையில், புதிய கஸ்டமைஸ்டு பேனல் மெட்டீரியலுடன் கூடிய 2K ஃபிளாட் டிஸ்ப்ளே (2K flat display) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்கிரீனில் ஒரு AR ஃபிலிம் லேயரும் (AR film layer) இடம்பெறும்.
ஆடியோ & ஹாப்டிக்ஸ்: மிகச் சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக 1115-சீரிஸ் சிமெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்கள் (Symmetrical dual speakers) மற்றும் சிறந்த அதிர்வு உணர்விற்காக (Haptic feedback) 0916-சீரிஸ் X-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis linear motor) வழங்கப்பட்டுள்ளது
கேமரா: சதுர வடிவிலான கேமரா மாட்யூலில், முதன்மை கேமராவாக OV50Q சென்சார் (OV50Q image sensor) இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iQOO 16 அல்ட்ரா மாடல் ரத்தா?
மெமரி உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு 'iQOO 16 அல்ட்ரா' (iQOO 16 Ultra) மாடலை அறிமுகப்படுத்துவதை நிறுவனம் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், ஸ்டாண்டர்ட் மாடலான iQOO 16 ஸ்மார்ட்போனே இந்த சீரிஸின் முதன்மை ஃபிளாக்ஷிப் மாடலாகக் களமிறங்க உள்ளது.