நடப்பு 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியை, முதல்முறையாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள சிறிய நாடான கேப் வெர்டே அணி எதிர்கொண்டது. உலகமே ஸ்பெயின் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்த்த இந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவிற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் கேப் வெர்டே அணியின் 40 வயது கோல்கீப்பர் வொசீன்யா ஆவார்.
அணியின் 7 கோல் முயற்சிகளைத் தடுத்த வொசீன்யா:
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக களமிறங்கிய கேப் வெர்டே, தனது அறிமுகப் போட்டியிலேயே வலுவான ஸ்பெயின் அணியை எதிர்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆட்டம் முழுவதும் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின் அணி, கேப் வெர்டே கோலை நோக்கி மொத்தம் 27 முறை ஷாட்களை அடித்தது. அதில் 7 முயற்சிகள் மட்டுமே கோல் இலக்கை நோக்கிச் சென்றன.
எனினும், கேப் வெர்டே வீரர்களின் ஒழுங்கான தற்காப்பும் கோல்கீப்பர் வோசின்யாவின் சிறப்பான சேவ்களும் காரணமாக ஸ்பெயினால் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 0–0 என டிராவில் முடிந்தது. தனது முதல் உலகக்கோப்பை ஆட்டத்திலேயே முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை கோல் இன்றி தடுத்த கேப் வெர்டே, உலகக் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
லாமின் யமாலால் முடியாத சாதனை: ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணியின் இளம் சூப்பர் ஸ்டார் லாமின் யமால் களம் புகுந்தும் கூட, வொசீன்யா மற்றும் கேப் வெர்டே அணியின் தடுப்பு ஆட்டத்தை (Defence) மீறி ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. வொசீன்யா அரணாக நின்று அனைத்து முயற்சிகளையும் முறியடித்தார்.
மைதானத்தில் கண்ணீர்: ஆட்டத்தின் இறுதி விசிலடிக்கப்பட்டதும், தங்களது வரலாற்றுச் சாதனை புள்ளியைப் பெற்ற மகிழ்ச்சியில் வொசீன்யா மைதானத்திலேயே மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக வீரர்கள் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
50 லட்சம் ஃபாலோயர்கள்:
இந்த அசாத்திய ஆட்டத்திற்கு முன்பாக, வொசீன்யாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெறும் 50,000-க்கும் குறைவான ஃபாலோயர்கள் மட்டுமே இருந்தனர்.
மின்னல் வேக உயர்வு: போட்டி முடிந்து அவர் ஊடகங்களைச் சந்திப்பதற்காக வெளியே வருவதற்குள், அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் (1.5 Million) கடந்தது. இந்தச் செய்தி எழுதப்படும் தற்போதைய நிலவரப்படி, அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை (5 Million) நெருங்கி சாதனை படைத்து வருகிறது. ஒரே ஒரு போட்டியின் மூலம் அவர் உலகளாவிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.
தனது 25-ஆவது வயதில் தான் வொசீன்யா அங்கோலாவின் ப்ரோக்ரெசோ (Progresso) கிளப் மூலம் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு மால்டோவா, சைப்ரஸ், சுலோவாக்கியா மற்றும் போர்ச்சுகல் நாட்டின் இரண்டாம் டிவி கிளப்பான சாவேஸ் (Chaves) போன்ற அணிகளுக்காக விளையாடினார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு தேசிய அணியில் இணைந்த அவர், பலமுறை ஓய்வு பெற நினைத்தாலும் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்ற இந்த ஒரே ஒரு கனவிற்காகவே 40 வயது வரை தொடர்ந்து உழைத்ததாகப் போட்டியின் பின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.