டெல்லி : பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், புதிய பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்கும் பெரும்பாலான மக்கள் தற்போது மைலேஜ், பராமரிப்பு செலவு மற்றும் நீண்டகால சேமிப்பு ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, 2026 மே மாதத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தை நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்குகள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டர்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் இருசக்கர வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் தினசரி பயணத்திற்காக அதிக மைலேஜ் தரும் வாகனங்களை விரும்புகின்றனர். இதனால் ஹீரோ ஸ்ப்ளெண்டர், பஜாஜ் பிளாட்டினா, ஹோண்டா ஷைன் போன்ற மாடல்கள் விற்பனையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளன.

குறிப்பாக ஹீரோ ஸ்ப்ளெண்டர், பல ஆண்டுகளாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பைக்காக இருந்து வருகிறது. குறைந்த விலை, எளிய பராமரிப்பு மற்றும் சிறந்த மைலேஜ் ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. அதேபோல் பஜாஜ் பிளாட்டினா பைக்கும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிலோமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் தரும் திறன் கொண்டதாக கூறப்படுவதால், தினசரி நீண்ட தூரம் பயணிப்பவர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.

ஸ்கூட்டர் பிரிவில் ஹோண்டா ஆக்டிவா தனது ஆதிக்கத்தை தொடர்கிறது. குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வசதி, எளிதான ஓட்டுதல் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக பெண்கள், முதியவர்கள் மற்றும் நகர்ப்புற பயணிகள் மத்தியில் இந்த வாகனம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரும் இதேபோன்ற காரணங்களால் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஹோண்டா எஸ்பி125 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி போன்ற பைக்குகளும் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. நல்ல மைலேஜையும் வழங்குவதால், செயல்திறன் மற்றும் சேமிப்பு இரண்டையும் விரும்புவோருக்கு இந்த வகையான பைக்குகள் சிறந்த தேர்வாக உள்ளன.

தற்போது அதிகம் விற்பனையாகும் சில முக்கிய இருசக்கர வாகனங்கள்:

ஹீரோ ஸ்ப்ளெண்டர் – ரூ.75,400 முதல்

பஜாஜ் பிளாட்டினா – ரூ.68,500 முதல்

ஹோண்டா ஆக்டிவா – ரூ.78,200 முதல்

ஹோண்டா ஷைன் 125 – ரூ.90,000க்கு அருகில்

ஹோண்டா எஸ்பி125 – ரூ.1 லட்சம் முதல்

டிவிஎஸ் அப்பாச்சி – ரூ.1.24 லட்சம் முதல்

டிவிஎஸ் ஜூபிடர் – ரூ.80,000க்கு அருகில்

மே மாதத்தில் டூ-வீலர்கள் அதிகமாக விற்றிருப்பது இந்தியப் பொருளாதாரம் நல்ல பாதையில் செல்வதைக் காட்டுகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் பைக் விற்பனை எகிறியிருப்பது, விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் கையில் பணம் புழங்குவதையும், அவர்களின் வருமானம் உயர்ந்துள்ளதையும் உணர்த்துகிறது.

அதேநேரம், சிட்டியில் இருப்பவர்கள் டெக்னாலஜி வசதிகள் நிறைந்த பைக்குகளையே அதிகம் விரும்புகின்றனர். அடுத்து வரப்போகும் மழைக்காலத்தில் வாகனங்களின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால், கம்பெனிகள் இப்போதே சூப்பரான EMI ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் தள்ளுபடிகளை வாரி வழங்கத் தொடங்கியுள்ளன.

அதனால், புது பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க பிளான் வைத்திருக்கிறீர்கள் என்றால் வெறும் விலையை மட்டும் பார்க்காதீங்க மைலேஜ் எவ்வளவு தரும், மெயின்டெனன்ஸ் செலவு கம்மியா இருக்குமா, ஸ்பேர் பார்ட்ஸ் ஈஸியா கிடைக்குமா மற்றும் பின்னாடி விற்றால் நல்ல ரீ-சேல் வேல்யூ கிடைக்குமா என்று யோசித்து வாங்குங்கள். இது உங்களின் பணத்தை நீண்ட காலத்திற்கு மிச்சப்படுத்தும் என ஆட்டோமொபைல் நிபுணர்கள் ஐடியா தருகிறார்கள்.