டெல்லி : நடுத்தர திறன் கொண்ட நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக் (Middleweight Naked Sports Bike) பிரிவில், பைக் பிரியர்களின் எவர்கிரீன் ஃபேவரைட் மாடலாக வலம் வரும் KTM 790 Duke பைக்கின் புதிய 2027 மாடலை சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது கேடிஎம் நிறுவனம்.

"தி ஸ்கால்பெல்" (The Scalpel) என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த பைக், தற்போது இன்னும் கூர்மையாகவும், பவர்ஃபுல்லான ரைடிங் அனுபவத்தைத் தரும் வகையிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிய வடிவமைப்பு

2027 KTM 790 Duke மாடலின் முக்கிய சிறப்பம்சமாக அதன் புதிய வடிவமைப்பு அமைந்துள்ளது. KTM-இன் ஃபிளாக்ஷிப் நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்கான 1390 Super Duke R மாடலில் இருந்து ஈர்க்கப்பட்ட தோற்றத்துடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய LED ஹெட்லைட், கூர்மையான DRL விளக்குகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெட்ரோல் டேங்க், மேலும் தசைநார் போன்ற தோற்றம் கொண்ட உடல் அமைப்பு ஆகியவை பைக்கிற்கு முந்தைய மாடலை விட அதிக ஆக்ரோஷமான தோற்றத்தை வழங்குகின்றன. அதேபோல், புதிய கிராபிக்ஸ் மற்றும் KTM-இன் அடையாளமான ஆரஞ்சு நிற டிசைன்களும் பைக்கின் அழகை உயர்த்துகின்றன.

மேலும், பழைய குரோமியம்-மாலிப்டினம் ஸ்டீல் ஃபிரேம் தொடர்ந்தாலும், KTM நிறுவனம் புதிய சப்ஃபிரேம் மற்றும் ஸ்விங்கார்ம் அமைப்புகளை பயன்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக பைக்கின் எடை 185 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட சுமார் 2 கிலோ எடை குறைவாகும். குறைந்த எடை காரணமாக நகர்ப்புற சாலைகளிலும், அதிவேக நெடுஞ்சாலை பயணங்களிலும் பைக் மேலும் சுறுசுறுப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே 799cc Parallel-Twin எஞ்சின்

புதிய 790 Duke மாடலில் KTM-இன் 799cc கொள்ளளவு கொண்ட LC8c Parallel-Twin எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 PS சக்தியையும், 87 Nm டார்க் திறனையும் உருவாக்குகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளதால் வேகமான கியர் மாற்றங்கள் மற்றும் சிறந்த ஓட்டும் அனுபவம் கிடைக்கிறது.

எஞ்சின் அமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாததால், KTM ரசிகர்கள் விரும்பும் அதே அதிரடியான செயல்திறன் தொடரும் என கூறப்படுகிறது.

மைலேஜிலும் கவனம் செலுத்தியுள்ளதா?

KTM நிறுவனம் அதிகாரப்பூர்வ பெட்ரோல் குறித்த சிக்கன விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும் தற்போதைய 790 Duke மாடலின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 முதல் 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கக்கூடும் என வாகன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

105 PS சக்தி வழங்கும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் என்பதால் மைலேஜை விட செயல்திறனுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எடை குறைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் காரணமாக பெட்ரோல் சிக்கனத்தில் சிறிய முன்னேற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2027 KTM 790 Duke மாடலில் புதிய தலைமுறை வண்ண TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது தெளிவான தகவல் காட்சியையும், எளிதான கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.

மேலும் இந்த மாடலில் இடம்பெற்றுள்ள வசதிகள்:

இவை அனைத்தும் பைக்கின் பாதுகாப்பு மற்றும் ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் அறிமுகமாகுமா?

புதிய KTM 790 Duke தற்போது சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடலை அறிமுகப்படுத்துவது குறித்து KTM இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. எனினும் இந்தியாவில் மிடில் வெயிட் நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், எதிர்காலத்தில் இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.