வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு - முதல்வர் ஆலோசனை..!

Nov 1, 2023 - 06:59
 0  0
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு - முதல்வர் ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மு க ஸ்டாலினை சந்தித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு, நேற்று ஆளுநர் எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

`இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.வும், `ஏமாற்று அரசியல்’ செய்யும் அ.தி.மு.க.வும்..! – அமைச்சர் உதயநிதி

தமிழக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி அனுப்பிய 10.5% இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, இதற்காக தமிழக அரசு தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு தமிழகத்தில் அரசு பணியிடங்களில் எம்.பி.சி பிரிவினர் எத்தனை சதவிகிதத்தினர் வேலைக்கு செல்கிறார்கள் என ஆய்வு செய்து, அந்த குழு தனது அறிக்கையை இறுதி செய்யவுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow