இனி வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவையில் பெற இயலாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Jun 10, 2023 - 06:23
 0  1
இனி வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவையில் பெற இயலாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை, இ-சேவை மையங்களின் மூலம் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இனி - இ சேவை உள்ளிட்டவை மூலம் பெற இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை, இ-சேவை மையங்களின் மூலம் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்களில் பெறும் வசதி இருந்து வந்தது. போலி அட்டைகளைத் தடுக்கும் வகையில், இனி வாக்காளர் அடையாள அட்டையை இனி தேர்தல் ஆணையமே வழங்கும். புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ், க்யூ ஆர் கோடு போன்ற நவீன வசதிகள் உள்ளதால், இந்த அட்டைகளை இ-சேவை மையங்களால் அச்சிட்டு வழங்க இயலாது என்பதால், தேர்தல் ஆணையமே இனி நேரடியாக வழங்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இனி வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, தபால் மூலம் மட்டுமே பெற முடியும் என தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்காளர் அடையாள அட்டை அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர் அட்டை தொலைந்தாலோ, சேதம் அடைந்தாலோ தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow