மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட் நியமனம்..!

மும்பையின் காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பிஎம்சி (உள்ளூர் தேர்தல்) தேர்தலுக்கு முன்னதாக, கட்சித் தலைமை மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, மும்பையின் தாராவி தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த வர்ஷா கெய்க்வாட், மும்பை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். வர்ஷா கெய்க்வாட், முன்னாள் எம்பி மற்றும் எம்ஆர்சிசி தலைவரான ஏக்நாத் கெய்க்வாட்டின் மகள் ஆவார்.

மேலும், அவர் நான்கு முறை எம்எல்ஏவாகவும், 2004 முதல் 2009 வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும், 2019 முதல் 2022 வரை கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரைத்தொடர்ந்து, குஜராத் காங்கிரஸ் தலைவராக (ஜிபிசிசி) எம்பி சக்திசிங் கோஹிலும், புதுச்சேரி காங்கிரஸ் (பிபிசிசி) தலைவராக எம்பி வி.வைத்திலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.