நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணம்..! புதிய செயலியை வெளியிட்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..!

Aug 4, 2023 - 05:47
 0  1
நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணம்..! புதிய செயலியை வெளியிட்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), நெடுஞ்சாலை பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உருவாக்கவும், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை ஊக்குவிக்கவும் 'ராஜ்மார்க்யாத்ரா' என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ராஜ்மார்க்யாத்ரா செயலி மூலம், நெடுஞ்சாலை பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ( MoRTH) தெரிவித்துள்ளது.

ராஜ்மார்க்யாத்ரா செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் என இரண்டிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியானது பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் புகார் தீர்வு முறையையும் வழங்குகிறது.

இது நிகழ்நேர வானிலை அறிவிப்புகள், சரியான நேரத்தில் ஒளிபரப்பு அறிவிப்புகள் மற்றும் அருகிலுள்ள சுங்கச்சாவடிகள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் பிற முக்கிய சேவைகள் பற்றிய விவரங்களை வழங்குகிறது. இந்த செயலி தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கிறது.

ராஜ்மார்க்யாத்ரா செயலியில் புகார் அளிக்கும் அமைப்பு உள்ளது. இதனால், வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் உட்பட நெடுஞ்சாலை தொடர்பான சிக்கல்களை பயனர்கள் சிரமமின்றி புகாரளிக்கலாம். பதிவு செய்யப்பட்ட புகார்கள், தாமதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உயர் அதிகாரிகளுக்குத் தானாகக் கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow