#BREAKING : எதிர்க்கட்சிகள் கடும் அமளி – இரு அவைகளும் 4-வது நாளாக முடக்கம்..!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், 4-வது நாளாக இரு அவைகளும் முடங்கியது. 

மணிப்பூரில் தொடர் வன்முறை நடந்து வரும் நிலையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 3 நாட்கள் நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட இரு அவைகளும் முடங்கியது.

4-வது நாளான இன்று எதிர்க்கட்சியினர் மணிப்பூர் விவகாரம் குறித்து தொடர்ந்து  ஈடுபட்டதால், இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில், மக்களவை மதியம் 2 மணிக்கு நடைபெற இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து 2 மணிக்கு மீண்டும் மக்களவை தொடங்கியது.

அப்போதும், மணிப்பூர் விவகாரம் குறித்து  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கேவின் மைக் ஆஃப் செய்யப்பட்டதால், மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி உடனடியாக விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், 4-வது நாளாக இரு அவைகளும் முடங்கியது.