பெண்களுக்கு ரூ.3000.. இலவச வீடு... இலவச அரிசி.! தெலுங்கானா முதல்வரின் தேர்தல் அறிவிப்புகள்.!

Oct 16, 2023 - 05:34
 0  0
பெண்களுக்கு ரூ.3000.. இலவச வீடு... இலவச அரிசி.! தெலுங்கானா முதல்வரின் தேர்தல் அறிவிப்புகள்.!

அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம், 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலும் ஒரே நாளான டிசம்பர் 3ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி, பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. சந்திரசேகர ராவ்  மீண்டும் தெலுங்கானா முதல்வரானார். Assembly Elections 2023: காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது..!

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்று தங்கள் கட்சியின் அடுத்த 5ஆண்டுகால திட்டம் என தேர்தல் அறிக்கையை முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள ஹுஸ்னாபாத்தில் இந்த தேர்தல் அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

கடந்த 2018 தேர்தல் பொதுக்கூட்டம் அறிவிப்பும் ஹுஸ்னாபாத்தில் தான் தொடங்கபட்டது. அதே போல் இந்த முறையும் ஹுஸ்னாபாத்தில் தேர்தல் அறிவிப்புகள் தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதி வரை 41 பொது பேரணிகளில் முதல்வர் சந்திரசேகர ராவ்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்..

  • சௌபாக்யலட்சுமி எனும் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மகளிருக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும்.
  • தகுதியுள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் கியாஸ் சிலிண்டர்.
  • முதியோர் ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ.5000 ஆக உயர்த்தப்படும்.
  • ஆரோக்கியஸ்ரீ பீமா திட்டத்தின்  கீழ் மருத்துவ காபபீடு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் என உயர்த்தபடும்.
  • முழு பிரீமியத்தை அரசு செலுத்தி அனைத்து பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் (மருத்துவ காப்பீடு) 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் .
  • கிரஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் 1 லட்சம் எண்ணிக்கையில் 2 படுக்கையறை வசதி கொண்ட வீடுகள் வழங்கப்படும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான 119 அரசு குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
  • மகளிர் குழுக்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டி தரப்படும்.
  • தெலுங்கானா அரசின் பெற்றோர் அற்ற குழந்தைகள் கொள்கையை மாநில குழந்தைகளாகக் கொண்டு குழந்தைகள் நலன் குறித்த திட்டங்கள் செயல்படுத்தபடும்.
  • அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்து அதனை உயர்த்த, உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க தெலுங்கானா அன்னபூர்ணா திட்டம் செயல்படுத்தப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow