தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோராம் என ஐந்து மாநில தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கிவிட்டன. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கஜ்வெல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். […]
அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம், 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலும் ஒரே நாளான டிசம்பர் 3ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி, பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. சந்திரசேகர ராவ் மீண்டும் தெலுங்கானா […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக 35,356 […]
மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம்,கேரளம் தெலுங்கானா,டெல்லி,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்றது.அப்போது, 2019-20 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1,65000 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், ரூ. 95,444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருந்தார். ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூ.65,000 கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி […]
மு.க.ஸ்டாலின் -தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இதனால் 3-ஆம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து […]
மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்திக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இதனால் 3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை […]