பெற்றோர்களே உஷார்..! 10 வயது குழந்தையின் மூளையை உட்கொண்ட அமீபா..! குழந்தையின் நிலை என்ன..?

Nov 28, 2023 - 07:42
 0  0
பெற்றோர்களே உஷார்..! 10 வயது குழந்தையின் மூளையை உட்கொண்ட அமீபா..! குழந்தையின் நிலை என்ன..?

அமெரிக்கா நாட்டில் கொலம்பியாவில், புக்காரமங்காவைச் சேர்ந்த ஸ்டெபானியா என்ற சிறுமி சான்டா மார்ட்டாவில் உள்ள தண்ணீரில் விளையாடியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.

ஆரம்பத்தில்,  அந்த சிறுமிக்கு காது வலிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பின், படுக்கையில் இருந்து எழுந்திருக்க சிரமப்பட்டார் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.! 

அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.  மருத்துவமனையில், அவர் இறப்பதற்கு முன் 3 வாரங்களாக சிகிச்சையளிக்கப்பட்டது. பல வாரங்கள் ஆய்வு செய்த பிறகு, நிபுணர்கள் அவர் அமீபிக் என்செபாலிடிஸ் நோயால் இறந்ததாகக் கூறினர்.

இது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு அரிய தொற்று,  இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால், இறப்புக்கான 95% வாய்ப்பு காணப்படும். இது பெரும்பாலும் "மூளையை உண்ணும் அமீபா" என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோலேரியால் ஏற்படக்கூடியது. இவை பெரும்பாலும் குளங்கள் அல்லது தேங்கி நிற்கும் நீரில் காணப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில், ஜூன் மாதம் கொலம்பியாவில் உள்ள சான்டா மார்ட்டாவில் உள்ள தண்ணீரில் விளையாடிய போது, தன் மகள் மூக்கின் வழியாக இந்த நோய் பரவியதாக தாய் டாடியானா கோன்சாலஸ் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow