ஓபிஎஸ் மேல்முறையீடு - வரும் புதன்கிழமை விசாரணை..!

Nov 10, 2023 - 07:41
 0  0
ஓபிஎஸ்  மேல்முறையீடு - வரும் புதன்கிழமை விசாரணை..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இதுபோன்ற செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை – ஐகோர்ட் உத்தரவு

இந்த சமயத்தில் ஓபிஎஸ், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார், அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இதனை  தொடர்ந்து, அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,  இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் முறையிடப்பட்ட நிலையில், புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow