“மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!

Mar 6, 2024 - 07:23
 0  0
“மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!

Meta : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு முடங்கியிருந்த நிலையில், மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இந்த சூழலில் திடீரென நேற்று இரவு உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கின. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளானார்கள்.

Read More - ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை

அதாவது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை பயப்படுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென லோக்அவுட் ஆகியுள்ளது, சிலருக்கு புகைப்படம், வீடியோ எதுவும் காட்டவில்லை. இதனால் பயனர்கள் தங்களது நெர்வொர்க் பிரச்சனை என கருதி flight mode ON/OFF செய்து பார்த்து, செயலிகளை uninstall/ install செய்து பார்த்த பிறகும் பயனர்களால் அந்த செயலிகளில் உள்ளே செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

Read More - அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!

இந்த பிரச்சனைகள் குறித்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். எக்ஸ் தள நிறுவனர் எலான் மஸ்க்கும், இந்த செயலிகள் முடங்கியது குறித்து விமர்சித்திருந்தார். எதனால் இந்த பிரச்சனை என மெட்டா நிறுவனமும் அறிவிப்பை வெளியிடவில்லை.  எனவே, நேற்று இரவு 9 மணியளவில் ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், அடுத்த ஒருசில மணிநேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

Read More - Apple MacBook : அதிரடி ஆஃபர்.! இந்தியாவில் விலை குறைந்த ஆப்பிள் மேக்புக்.! மாடல், விலை விவரம்..!

இந்த நிலையில், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் செயலிகள் முடங்கியிருந்த நிலையில், மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், தொழில்நுட்ப கோளாறால், எங்களது சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். ஆனால், நாங்கள் உடனடியாக அந்த சிக்கலை முடிந்தவரை சரிசெய்துவிட்டோம். இருப்பினும், மக்களின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow