அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!

Samsung Galaxy F15 : சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி F15 5G சீரிஸ் என்ற பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தனது புது புது சாதனங்களை தொடர்ந்து வெளியிட்டு, சர்வதேச சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. அதில், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் அதிகளவு ஈடுபட்டு வரும் சாம்சங், தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாம்சங்கின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானது.

Read More – Apple MacBook : அதிரடி ஆஃபர்.! இந்தியாவில் விலை குறைந்த ஆப்பிள் மேக்புக்.! மாடல், விலை விவரம்..!

அந்தவகையில் சாம்சங் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனான Galaxy F15 5G சீரிஸை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் 6100+  ப்ராசஸர் மூலம் மூலம் இயக்கப்படுகிறது. மொபைலில் 4 ஆண்டுகள் வரை ஓஎஸ் அப்டேட்டுக்கள் வழங்கபடுகிறது.

Read More – பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்

அதுமட்டுமில்லாமல், மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை மெமரியை பயன்படுத்திக்கொள்ளலாம். சாம்சங்கின் Galaxy F15 5G சீரிஸ் ஸ்மார்ட்போன் மலிவான விலையில் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளதால், ஏற்கனவே உள்ள Redmi, Realme மற்றும் Motorola போன்றவற்றின் ஸ்மார்ட்போன்களுக்கு சாம்சங் கடுமையான போட்டியாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

Read More – மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியை கொன்றுவிடுவோம்.. மிரட்டல் விடுத்த கர்நாடகா நபர்!

இந்தியாவில் Samsung Galaxy F15 விலை:

4ஜிபி ரேம்/128ஜிபி ரோம் கொண்ட Samsung Galaxy Galaxy F15 5G-யின் விலை ரூ.12,999 மற்றும் 6ஜிபி ரேம்/128ஜிபி ரோம் கொண்ட மொபைலின் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆஷ் பிளாக், ஜாஸி கிரீன் மற்றும் க்ரூவி வயலட் என மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது.

Galaxy F15 5G சீரிஸ் அம்சங்கள்:

  • Galaxy F15 5G மொபைலானது 6.5-இன்ச் FULL  HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெபிரேஸ் ரேட் கொண்டுள்ளது.
  •  ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட One UI 6-இல் இயங்குகிறது. மீடியாடெக் டிமான்சிட்டி 6100+ ப்ராஸசர் உள்ளடக்கியுள்ளது.
  • Galaxy F15 5G ஆனது குறைந்தது  ஆண்ட்ராய்டு 18 வரை OS புதுப்பிப்புகளைப் பெறும்.
  • இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான 6,000 mAh பேட்டரி உள்ளது.
  • முன்புற கேமராவில் வீடியோ டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (VDIS) உடன் 13MP வருகிறது. இதுபோன்று பின்புறத்தில் 50 MP, 5 MP மற்றும் 2 MP கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.
  • 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
  • மேலும் 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி போர்ட் என போன்றவைகளும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment