பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்

Google: கூகுள் நிறுவனம் புகழ்பெற்ற ஷாதி, பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேவைக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ப்ளே ஸ்டோரில் இருந்து ஷாதி, ட்ரூலி மேட்லி, ஸ்டேஜ், ஜோடி, பாரத் மேட்ரிமோனியின் முஸ்லிம் மேட்ரிமோனி, கிறிஸ்டியன் மேட்ரிமோனி, ஆல்ட் பாலாஜியின் ஆல்ட் உள்ளிட்ட ஆப்ஸ்கள் நீக்கப்படவுள்ளன.

Read More – St.David’s Day: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு டிராகன் கொண்ட சிறப்பு டூடல்.!

இதன்மூலம் பயனாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அப்ளிகேஷன்களைத் தேடி இன்ஸ்டால் செய்ய முடியாது என கூறப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூகுள் நிறுவனம், குறித்த ஆப்ஸ்களை நீக்குகிறது. இந்த செய்தி வெளியான பிறகு Matrimony.com-ன் பங்குகள் 2.7 சதவீதம் என்ற அளவில் சரிவை சந்தித்துள்ளது.

கூகுளின் இந்த முடிவு டெவலப்பர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பாரத் மேட்ரிமோனியின் தலைமை நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராமன் கூறுகையில், “இதை இந்திய இணையதளத்தின் இருண்ட நாள் என்று கூறுவேன். இணையத்தில் என்ன இருக்கப் போகிறது என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தின் சட்டங்கள் தீர்மானித்ததைப் போலல்லாமல், இப்போது ஆப்பிள் மற்றும் கூகிள் ஆகிய இரண்டும் தான் தீர்மானிக்கிறது” என கூறியுள்ளார்.

இதனிடையில் கூகுள் நிறுவனம், ஆப்ஸ் டெவலப்பர்களுக்கு சில வழிகாட்டுதலை கூறி அதை பின்பற்றினால் அவர்களின் ஆப்ஸ்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படாது என தெரிவித்துள்ளது. அதன்படி, பயன்படுத்தும் அளவை கொண்டு சேவைக் கட்டணம் செலுத்தாமல் இருப்பது, GPBS ஐ ஒருங்கிணைத்தல் அல்லது மாற்று பில்லிங் முறையை வழங்குதல் போன்றவைக்கு ஒத்துழைப்பு வழங்க கோரியுள்ளது.

Read More – யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெயிட்டிங்? இம்மாதம் வெளியாகும் டாப் 4 லிஸ்ட்!

Leave a Comment