யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெயிட்டிங்? இம்மாதம் வெளியாகும் டாப் 4 லிஸ்ட்!

Top Smartphone : தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு புதிய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், இந்த மார்ச் மாதத்தில் ஸ்மார்ட்போன் வாசிகளுக்கு சிறந்த மாதமாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில் 4 புதிய ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களுடன் வெளிவர காத்திருக்கிறது.

Read More – 25 ஆயிரத்துக்கு போன் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்துவிட்டது Oppo F25 Pro 5G!

அதன்படி, நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a), ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus), ஜியோமி 14 (Xiaomi 14) மற்றும் விவோ வி30 சீரிஸ் ஆகிய 4 புதிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் இம்மாதம் களமிறங்குகிறது. எனவே, புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க இருப்பவர்கள், இந்த 4 மொபைல்களின் விலை, அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

நத்திங் போன் 2ஏ :

நத்திங் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2ஏ வரும் 5ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த மொபைலானது 2 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 7200 Pro சிப் இருக்கும் நிலையில் 12GB வரை ரேம் கொண்டிருக்கும். 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதி மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

Read More – புதிய அம்சத்துடன் வெளியானது Noise-ன் Fit Twist Go ஸ்மார்ட் வாட்ச் ..! விலை என்ன தெரியுமா ..?

ரியல்மி 12 பிளஸ் :

Realme 12 Plus மொபைலானது மார்ச் 6ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது MediaTek Dimensity 7050 சிப் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் வசதியும் உயர்தர AMOLED டிஸ்ப்ளேவுடன் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஃபோனில் 5,000 mAh பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது, பின்புறத்தில் 4 கேமராக்களை கொண்டுள்ள இந்த போன் பச்சை மற்றும் கோல்ட் நிறங்களில் வெளிவருகிறது.

ஜியோமி 14 :

மார்ச் 7 முதல் அமேசானில் Xiaomi 14 ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6.36-இன்ச் OLED டிஸ்ப்ளே வசதியுடன் அறிமுகமாக உள்ளது. இந்த ஃபோன் பின்புறத்தில் மூன்று 50MP கேமராக்கள் மற்றும் 32MP செல்பி கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. மேலும், வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் பேட்டரியுடன் வெளிவர இருக்கிறது.

Read More – Paytm : வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்துகிறது பேடிஎம் ..! அடுத்தகட்ட திட்டம் இதுதானா ..?

விவோ வி30 சீரிஸ் :

Vivo V30 சீரிஸ் மொபைலானது Vivo V30 மற்றும் Vivo V30 Pro என இரண்டு மாடல்களை கொண்டுள்ளது. இது வரும் 7ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. V30 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப், ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய பேட்டரி மற்றும் 120 ஹெர்ட்ஸ்ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய, 6.78 இன்ச் MOLED டிஸ்ப்ளே, கவரக்கூடிய கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. இதுபோன்று, விவோ வி30 ப்ரோ மாடலில் சிறப்பான கேமராக்கள், மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப் மற்றும் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment