மணிப்பூர் கொடூரம்..வீடியோவை நீக்க வேண்டும்..! சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!

Jul 20, 2023 - 06:05
 0  0
மணிப்பூர் கொடூரம்..வீடியோவை நீக்க வேண்டும்..! சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் வீடியோவை தொடர்பான வீடியோவை நீக்க வேண்டும் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில், தீவைத்து எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 133 பேர் உயிரிழந்ததாகவும், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி, அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தும், வன்முறை நீடித்து வருகிறது. இதனால், மணிப்பூரில் பல்வேறு பகுதிகள் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. இதற்கு பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை நீக்க வேண்டும் எனவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow