முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி... ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

Jan 6, 2024 - 07:12
 0  0
முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி... ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில்,  746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

விறுவிறுப்பாக நடைபெறும் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு..!

ஆனால், இந்த ஆண்டு இலங்கை தனது முதல் ஜல்லிக்கட்டு போட்டியை திருகோணமலையில் நடத்துகிறது. திருகோணமலை சம்பூர் பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 200க்கும் மேற்பட்ட காளைகளும், 100 இற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். இந்த எல்லை தாண்டிய கொண்டாட்டத்தின் மூலம் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow