பிரதமர் மோடியின் நிகழ்ச்சி..! வாடகை விமானம் மூலம் இந்திய வம்சாவளி 170 பேர் சிட்னி பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 170 இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தார். சிட்னி வந்தடைந்த பிரதமர் மோடியை நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் கோஷமிட்டு வரவேற்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா-இந்தியா உறவைப் பற்றி அவர் பேசும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்து புலம்பெயர்ந்த இந்தியர்கள் சுமார் 170 பேர் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு வாடகை விமானம் மூலம் புறப்பட்டுள்ளனர்.

இந்திய ஆஸ்திரேலிய புலம்பெயர் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் (IADF) “மோடி ஏர்வேஸ்” என்று பெயரிடப்பட்ட விமானத்தில் மூன்று வண்ணத் தலைப்பாகைகளை அணிந்துகொண்டும் தேசியக் கொடிகளை அசைத்துக்கொண்டும் சென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் ஆற்றல்மிக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தை கொண்டாடுவதற்காக ஐஏடிஎப் ஆல் இந்த சிட்னி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐஏடிஎப்யின் இணை நிறுவனர் டாக்டர் அமித் சர்வால் கூறுகையில், அதிக மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே காத்திருக்கிறார்கள், அங்கு அவர்கள் பிரதமர் மோடியை உற்சாகப்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி நாளை சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.