31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

9 நாள் பயணம்.. புதிய ஒப்பந்தங்கள்..! பயணத்துக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்கிறேன் என முதல்வர் பேட்டி.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று முதல் 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இன்று சிங்கப்பூர், ஜப்பான் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையம் செல்வதற்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதன்பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறேன். முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முக்கிய தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளேன்.

வெளிநாடு பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இந்த பயணம் வெற்றிகரமாக முடியும், அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வரும். கடந்த துபாய் பயணத்தின்போது ரூ.6,100 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இந்த முதலீடுகள் மூலம் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாகின.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 2 ஆண்டுகளில் 4.12 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் முதலமைச்சர்.