நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சரத்பாபு உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை, தி.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று நடிகர் சரத்பாபு உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ” நான் நடிகர் ஆகும் முன்பே சரத்பாபுவை எனக்கு தெரியும். நானும் அவரும் நெருங்கிய நல்ல நண்பர்கள். அவர் ரொம்ப அருமையான மனிதர்.

அவர் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பவர். அவர் கோபம் அடைந்து நான் பார்த்ததே இல்லை. அந்த அளவிற்கு மிகவும் அமைதியானவர். என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு..நான் சிகரெட் பிடித்தால் அதனை பார்த்து ரொம்பவே வருத்தப்படுவார். சிகெரட் பிடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறுவார். அவர் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது” என ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.
மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி #Rajinikanth #SarathBabu pic.twitter.com/OulCby7lO9
— Rajagopal Mookaiyah (@rgtwtz) May 23, 2023
மேலும், மறைத்த நடிகர் சரத்பாபு ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.