கச்சதீவு பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்த இலங்கை.!  

Sri Lanka Speak about Katchatheevu Issue

Katchatheevu : கச்சதீவு பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி இந்தியா வசம் இருந்த கச்சதீவானது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், அப்போதைய தமிழக அரசு பொறுப்பில் இருந்த திமுக இதற்கு உடந்தையாக இருந்தது என்றும் பாஜக சமீபத்தில் குற்றம் சாட்டியது. இது தொடர்பான தகவல் அறியும் உரிமை சட்ட அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், … Read more

கச்சத்தீவை பாஜக கையில் எடுக்க இதுவே காரணம்.! இலங்கை முன்னாள் தூதர் கருத்து.!

Kachatheevu Island - K Annamalai

Katchatheevu : தேர்தல் நேரம் என்பதால் 50 வருடத்துக்கு முன் முடிந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது – இலங்கை முன்னாள் தூதர். அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்த தகவலை சேகரித்து அதனை பொதுவெளியில் தெரிவித்தார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இதனையே பிரதமர் மோடி மற்றும் … Read more

தமிழக மீனவர்கள் 24 பேரை விடுதலை!

tn fisherman

Fisherman : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை. கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதன்பின், 19 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை … Read more

கட்சத்தீவை கேட்டால் தக்க பதில் அளிப்போம்… இலங்கை அமைச்சர் பரபரப்பு.!

Katchatheevu Island

Katchatheevu : கட்சத்தீவை தீவை இதுவரை இந்தியா திருப்பி கேட்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கச்சதீவு கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்களை தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்று, அண்மையில் அதனை பகிர்ந்து இருந்தார். அதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளாலே கச்சத்தீவு இலங்கைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக … Read more

கச்சத்தீவு விவகாரம்! 21 முறை முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் – ஜெய்சங்கர் விளக்கம்!

Jaishankar

Kachchatheevu: கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கச்சத்தீவு ஒப்பந்தம் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1974ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தத்தால் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 … Read more

மீண்டும் தொடங்கும் பேச்சுவார்த்தை.? புத்துயிர் பெறுமா தனுஷ்கோடி – தலைமன்னார் கடல்வழி பாதை…

Dhanushkodi to Thalai mannar

1914ஆம் ஆண்டு முதல் தமிழக கடல் பகுதியான தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரையில் கடல்வழி மார்க்கமாக வணிக போக்குவரத்து தொடங்கப்பட்டு, 1964 வரையில் நீடித்தது. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல்  காரணமாக தனுஷ்கோடி சிதைந்தது. இதனால் கடல்வழி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு முறை மீண்டும் தனுஷ்கோடி – தலைமன்னார் வரையில் கடல்வழி போக்குவரத்து துவங்கவும், அல்லது 23 கிமீ தூரத்தை இணைக்க பாலம் அமைக்கவும் பேச்சுவார்த்தையை இந்திய அரசு தொடங்கியது. ஆனால் … Read more

முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி… ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

SriLanka Jallikattu

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில்,  746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் … Read more

மீண்டும் இலங்கை அணியில் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா!

Sanath Jayasuriya

இலங்கையின் அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்த நாட்டு அரசு கலைத்தது. இதன்பின், விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழு அமைக்கப்பட்டது. ஆனால், அரசியல் … Read more

துவாரகா வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை.. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை வெளியீடு!

Dwaraka

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ‘மாவீரர் தினம்’ ஆண்டுதோறும் நவ.27ம் தேதி அந்நாட்டு தமிழர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், நவ.27ம் தேதி 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். மேலும், … Read more

20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அதிரடி கைது.! இலங்கை கடற்படை நடவடிக்கை.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   புதுக்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இன்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. அப்போது, இலங்கை, காரை நகர் தென்கிழக்கு கோவளம் அருகே இலநகை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் பிற்பகல் 2-4 மணிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை தற்போது காரைநகர் கடற்படை … Read more