அடடே.! பொங்கல் வைக்கப் போறீங்களா.? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…!

Pongal 2024

தை மாதத்தில் தைப்பொங்கலை வரவேற்கும் அற்புதமான சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். தைப்பொங்கலின் சூரிய பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் சிறப்புகள் மற்றும் பொங்கல் வைக்கும் நேரம் பற்றி இப்ப பதிவில் தெரிந்து கொள்வோம்.. பொங்கல் சிறப்பு : தைத்திருநாளை அறுவடை தினமாகவும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க கூடிய ஒரு திருநாளாகவும் உழவர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் ஒரு உன்னதமான நாளாகும். பொங்கல் வைக்கும் நேரம் : இந்த வருடம் தை மாதம் அதிகாலை … Read more

பொங்கல் பண்டிகை: பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு.!

flowers market

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை 2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் என விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 2000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. குறிப்பாக, நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று கிலோ 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா உள்ளிட்ட … Read more

Holiday: வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை.!

Banks - Holiday

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்கிகளுக்கு இன்று முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்த … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Special train

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், நெல்லை, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய் கிழமையில் (ஜன. 14, 16) தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு … Read more

மதுரை ஜல்லிக்கட்டு: காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது

Jallikattu reservation

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு நடைபெறும். இதில் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு!

madurai High Court

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும் … Read more

முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி… ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

SriLanka Jallikattu

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில்,  746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் … Read more

ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பெயர் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

jallikattu madurai high court

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதியை குறிப்பிடக் கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாநகரை சேர்ந்த … Read more

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர்!

jallikattu

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் … Read more

அடுத்த மாதம் வங்கிக் கணக்கில் ரூ.2000 வருகிறது? எப்படி தெரியுமா?

pongal parisu

பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ரூ.1000 கொடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே, மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கொடுக்க ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜனவரி 14 ஞாயிறு, 15ம் தேதி பொங்கல் என்பதால், அதற்கு முன்னதாக ஜனவரி 12 அல்லது 13ம் தேதியே பொங்கல் பணம் 1000 ரூபாயும், மகளிர் உரிமை தொகை ரூ.1000 … Read more