கட்சத்தீவை கேட்டால் தக்க பதில் அளிப்போம்… இலங்கை அமைச்சர் பரபரப்பு.!

Katchatheevu : கட்சத்தீவை தீவை இதுவரை இந்தியா திருப்பி கேட்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கச்சதீவு கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்களை தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்று, அண்மையில் அதனை பகிர்ந்து இருந்தார். அதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளாலே கச்சத்தீவு இலங்கைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இது தொடர்பாக பேசிய இந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் செயல்பாடுகளால் கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டதாகவும், இது மாநில ஆளுங்கட்சியான திமுகவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில், தமிழகத்தில் இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இதுவரை கச்சத்தீவு விவகாரம் குறித்து எந்த ஒரு அதிகார தகவலையும் இந்தியா இலங்கையிடம் கேட்கவில்லை. கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா எந்த ஒரு கோரிக்கையும் விடுக்கவில்லை. ஒருவேளை கசத்தீவு குறித்த கேள்வி இலங்கையில் எழுப்பப்பட்டால், அதற்கு இலங்கை வெளிறவுத்துறை அமைச்சகம் தக்க பதிலை கொடுக்கும் என்றும், கட்சத்தீவு தற்போது இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் ஜீவன் தொண்டைமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.