தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், 746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் […]