ஜெய் ஸ்ரீ ஹனுமான்... நான் கடவுளை நம்புகிறேன்! பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு கேசவ் மகராஜ் பதிவு!

Oct 28, 2023 - 05:41
 0  1
ஜெய் ஸ்ரீ ஹனுமான்... நான் கடவுளை நம்புகிறேன்! பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு கேசவ் மகராஜ் பதிவு!

ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் நேற்று 26-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கி பாகிஸ்தான் அணி, 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது.

தென்னாபிரிக்கா அணியில் ஷம்சி 4, மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2  விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க,  மறுபுறம் ஐடன் மார்க்ராம் அதிரடியாக விளையாடினார். இதனால் அணியின் ஸ்கோர் வெற்றியை நோக்கி சென்றது. ஒருபக்கம் விக்கெட் இழந்தாலும், ஐடன் மார்க்ராம் இறுதி வரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

2011 – 2023 உலககோப்பை இந்திய அணிகளுக்கு இதுதான் வித்தியாசம் – சுட்டிக்காட்டிய எம்எல் தோனி!

பின்னர் திடீரென சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தபோது 91 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அப்போது, பாகிஸ்தான் அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. போட்டி திரிலாக சென்றது. ஒரு கட்டத்தில் 9 விக்கெட்களை தென்னாப்பிரிக்கா அணி இழந்த நிலையில், அப்போது ஒன்பதாம் வரிசை வீரர் கேஷவ் மகாராஜ் மற்றும் பதினோராம் வரிசை வீரர் ஷம்சி இணைந்து கடைசி 11 ரன்களை எடுத்தனர்.

இறுதி வரை திரிலாக இருந்த போட்டியில், இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிச்சு அணியை வெற்றி பெற வைத்தனர். இதில், கேஷவ் மகாராஜ் விக்கெட் முக்கியமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் நிதானம் மற்றும் அனுபவம் காரணமாக 48வது ஓவரில் ஒரு ஃபோர் அடித்து அணி வெற்றி பெற உதவினார். இறுதியாக தென்னாபிரிக்கா அணி 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து  271 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

#WorldCup2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பவுலிங் தேர்வு!

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு கேஷவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றித் தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், கடவுளை நான் நம்புகிறேன். எங்கள் வீரர்களிடம் இருந்து என்ன ஒரு சிறப்பான முடிவு. ஷம்சி மற்றும் எய்டன் மார்கிரம் செயல்பாடு அபாரமாக இருந்தது. இதை பார்ப்பது அருமையான தருணம், ஜெய் ஸ்ரீ அனுமான் எனக் கூறி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா வீரர் கேஷவ் மகாராஜ், ஜெய் ஸ்ரீ ஹனுமான் என கூறி இருப்பது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு ஜெய் ஸ்ரீ அனுமான் எனக் கூறி இருப்பதை பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தென்னாப்பிரிக்கா வீரர் கேஷவ் மகாராஜ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் அவரது தந்தை வழி முன்னோர்கள் 1874இல் குடியேறியவர்கள் என கூறப்படுகிறது. இதனால் கேஷவ் மகாராஜ் தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும் இந்திய ஆன்மீக மற்றும் கலாசார தொடர்புகளை இன்னும் தொடர்கிறார். தன்னை தீவிர ஹனுமான் பக்தராக காட்டிக் கொண்டு இருக்கிறார்.

 

View this post on Instagram
 

A post shared by Keshav Maharaj (@keshavmaharaj16)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow