ஹைதராபாத் போட்டியில் களமிறங்கும் முகேஷ் சவுத்ரி ..? வங்கதேசம் திரும்பும் முஸ்தபிசுர் !

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பை பயிற்சிக்காக வங்கதேசம் திரும்ப உள்ளார்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள முஸ்தபிசுர் ரஹ்மான் இருக்கிறார். இவர் சென்னை அணிக்காக விளையாடிய 3 போட்டிகளும் விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உ ள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் 7 விக்கெட்டுகள் எடுத்த இவர் இந்த தொடரின் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும், பர்புள் கேப்பையும் கைவசம் வைத்துள்ளார்.

தற்போது, இவரை வங்கதேச அணி இந்த ஆண்டில் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சியில் ஈடுபட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இவர் வருகிற ஏப்ரல்-5 ல் ஐபிஎல் தொடரில் நடைபெற இருக்கும் சென்னை, ஹைதராபாத் போட்டியில் இவர் பங்கு பெற மாட்டார் என தெரிகிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை அணி நிர்வாகம் ரூ.2 கோடி கொடுத்து எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதனால் சென்னை ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தாலும் ஒரு புறம் சிறிய மகிழ்ச்சியிலும் இருக்கிறார்கள். அதற்கு காரணம், சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இடது கை வேக பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி தான். முகேஷ் சவுத்ரி, இதற்கு முன் சென்னை அணிக்காக 2022 ம் ஆண்டு விளையாடினார். கடந்த 2023-ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் முகேஷ் விளையாடுவர் என்று எதிர்பார்த்த போது அவர் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து வெளியேறினார்.

முகேஷ் சவுத்ரி சென்னை அணிக்காக மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரை சென்னை அணி நிர்வாகம் 2022-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் அறிமுகத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கு எடுத்தனர், பின் 2024ம் மீண்டும் இவரை சென்னை அணி நிர்வாகம் தக்க வைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.