உச்சம் தொட்ட தங்கம் விலை ..! சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு ..!

Gold Price: கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதியில் சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது வாரத்தின் முதல் நாள் உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். நேற்று குரவைக்க விற்கப்பட்ட தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன் படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (03-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52,000-க்கும், கிராமுக்கு  ரூ.70 உயர்ந்து ரூ.6,500-க்கும் விற்பனை விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ரூ.84-க்கும், கிலோ வெள்ளி ரூ.2000 அதிகரித்து ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (02-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 51,440-க்கும், கிராமுக்கு ரூ.6,430-க்கும் விற்பனை விற்பனைசெய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.82 -க்கும், கிலோ வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.