புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை!

Feb 9, 2024 - 07:23
 0  0
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை!

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவிழா, பொருட்காட்சி, பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டமாக பஞ்சு மிட்டாய் உள்ளது.  இந்த சூழலில், பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதாவது, பஞ்சுமிட்டாயில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ரோடமின் பி எனப்படும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை, இதனை சிறு குழந்தைகள் உண்ணும் போது எளிதாக பாதிக்க பெரும் அளவில் வாய்ப்பு உள்ளது. இந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பஞ்சுமிட்டாயில் விஷத்தன்மை வாய்ந்த ரோடமின் பி என்ற நிறமி சேர்க்கப்பட்டிருப்பதை கண்டறிந்ததாக கூறப்படுகிறது. உடல்நலத்தைப் பாதிக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாயை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

ஹல்த்வானி வன்முறை: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்… அமலானது ஊரடங்கு உத்தரவு!

தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களிடம் இருந்து நச்சுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாயை விற்பனை செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் பஞ்சுமிட்டாயை மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, உரிய உரிமம் பெறும் வரை பஞ்சுமிட்டாய் விற்க தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடைய, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை எதுவும் பிறப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. வடமாநில இளைஞர்கள் 30 பேரை உரிய உரிமம் பெற்று பஞ்சு மிட்டாய் விற்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow