புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை!

Cotton Candy

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவிழா, பொருட்காட்சி, பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டமாக பஞ்சு மிட்டாய் உள்ளது.  இந்த சூழலில், பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதாவது, பஞ்சுமிட்டாயில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ரோடமின் பி எனப்படும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த ரசாயனம் … Read more

காலாவதியான குளிர்பானங்கள் குறித்து புகாரளிக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் – உணவு பாதுகாப்புத்துறை

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில் 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் ரூ.9.02 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  484 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புகார் அளிக்க..! பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும்  என்றும், தரமற்ற, காலாவதியான குளிர்பானங்கள் குறித்து 94440 42322 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்றும் உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

#BREAKING : கேன் குடிநீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..! உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு..!

குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தரமற்ற குடிநீர் அருந்துவதால் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியின் போது தரத்தை ஆய்வு செய்த பின்புதான் கேன்களில் அடைத்து குடிநீரை … Read more