பிஃபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் தங்களது ஆட்டங்களில் இமாலய வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளன.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஏ முதல் எஃப் வரையிலான (Group A - F) பிரிவுகளின் புதுப்பிக்கப்பட்ட முழுமையான புள்ளிகள் பட்டியல் (Points Table) மற்றும் ஆட்டங்களின் சுவாரசியமான விபரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்ப்போம்..
7-1 என மிரட்டிய ஜெர்மனி: குரூப் இ பிரிவில் நடந்த ஆட்டத்தில் கியுராசோ (Curacao) அணியை 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வீழ்த்தியது. கடந்த 2014 உலகக்கோப்பையில் பிரேசிலை 7-1 என வீழ்த்திய வரலாற்றுச் சாதனையை ஜெர்மனி மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் 'கோல் வித்தியாச' (Goal Difference) அடிப்படையில் ஜெர்மனி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதே பிரிவில் எக்குவடோர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது.
5 கோல்கள் அடித்த ஸ்வீடன்: குரூப் எஃப் பிரிவில் துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்வீடன் முதலிடம் பிடித்துள்ளது. ஸ்வீடன் அணியின் யாசின் அயாரி 2 கோல்களும், அலெக்சாண்டர் இசக் மற்றும் விக்டர் கியோகெரெஸ் தலா 1 கோலும் அடித்தனர். குறிப்பாக, மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த மட்டியாஸ் ஸ்வான்பெர்க் மைதானத்திற்குள் வந்த வெறும் 17 வினாடிகளில், தனது முதல் டச்சிலேயே கோல் அடித்து அசத்தினார். இதே பிரிவில் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
பிஃபா உலகக்கோப்பை 2026 புள்ளிகள் பட்டியல்
GROUP A
1. மெக்சிகோ
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 2 | GA: 0 | GD: +2 | Pts: 3
2. தென்கொரியா
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 2 | GA: 1 | GD: +1 | Pts: 3
3. செக்கியா
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 1 | GA: 2 | GD: -1 | Pts: 0
4. தென்னாப்பிரிக்கா
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 0 | GA: 2 | GD: -2 | Pts: 0
GROUP B
1. கனடா
MP: 1 | W: 0 | D: 1 | L: 0 | GF: 1 | GA: 1 | GD: 0 | Pts: 1
2. போஸ்னியா & ஹெர்சகோவினா
MP: 1 | W: 0 | D: 1 | L: 0 | GF: 1 | GA: 1 | GD: 0 | Pts: 1
3. சுவிட்சர்லாந்து
MP: 0 | W: 0 | D: 0 | L: 0 | GF: 0 | GA: 0 | GD: 0 | Pts: 0
4. கத்தார்
MP: 0 | W: 0 | D: 0 | L: 0 | GF: 0 | GA: 0 | GD: 0 | Pts: 0
GROUP C
1. ஸ்காட்லாந்து
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 1 | GA: 0 | GD: +1 | Pts: 3
2. மொராக்கோ
MP: 1 | W: 0 | D: 1 | L: 0 | GF: 1 | GA: 1 | GD: 0 | Pts: 1
3. பிரேசில்
MP: 1 | W: 0 | D: 1 | L: 0 | GF: 1 | GA: 1 | GD: 0 | Pts: 1
4. ஹைட்டி
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 0 | GA: 1 | GD: -1 | Pts: 0
GROUP D
1. அமெரிக்கா
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 4 | GA: 1 | GD: +3 | Pts: 3
2. ஸ்திரேலியா
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 2 | GA: 0 | GD: +2 | Pts: 3
3. துருக்கி
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 0 | GA: 2 | GD: -2 | Pts: 0
4. பராகுவே
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 1 | GA: 4 | GD: -3 | Pts: 0
GROUP E
1. ஜெர்மனி
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 7 | GA: 1 | GD: +6 | Pts: 3
2. ஐவரி கோஸ்ட்
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 1 | GA: 0 | GD: +1 | Pts: 3
3. எக்குவடோர்
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 0 | GA: 1 | GD: -1 | Pts: 0
4. கியுராசோ
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 1 | GA: 7 | GD: -6 | Pts: 0
GROUP F
1. ஸ்வீடன்
MP: 1 | W: 1 | D: 0 | L: 0 | GF: 5 | GA: 1 | GD: +4 | Pts: 3
2. ஜப்பான்
MP: 1 | W: 0 | D: 1 | L: 0 | GF: 2 | GA: 2 | GD: 0 | Pts: 1
3. நெதர்லாந்து
MP: 1 | W: 0 | D: 1 | L: 0 | GF: 2 | GA: 2 | GD: 0 | Pts: 1
4. துனிசியா
MP: 1 | W: 0 | D: 0 | L: 1 | GF: 1 | GA: 5 | GD: -4 | Pts: 0
மேலும், கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்பதால் இது மிக பிரம்மாண்டமான தொடராகக் கருதப்படுகிறது. மொத்தம் உள்ள 48 அணிகள், ஒரு குழுவிற்கு 4 அணிகள் வீதம் 12 குழுக்களாகப் (Groups) பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக 'ரவுண்ட் ஆஃப் 32' (Round of 32) சுற்றுக்குத் தகுதி பெறும். இது தவிர, 12 குழுக்களிலும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகளில், சிறந்த புள்ளிகள் மற்றும் கோல் கணக்குகளைக் கொண்ட டாப் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவைகளும் 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றுக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.