சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வந்த நிலையில், ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்தே சந்தை நிலவரம் மாறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, ஜூலை 9ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ. 13,220-க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ரூ. 1,06,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி விலை சற்று உயர்ந்து கிராம் ரூ. 13,350-க்கும், சவரன் ரூ. 1,06,800-க்கும் விற்பனையானது. மீண்டும் ஜூலை 11ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாயும், சவரனுக்கு 400 ரூபாயும் குறைந்து முறையே ரூ. 13,300 மற்றும் ரூ. 1,06,400 என விற்பனை ஆனது. ஜூலை 12ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக இருந்த நிலையில், ஜூலை 13ஆம் தேதி கிராமுக்கு 100 ரூபாயும், சவரனுக்கு 800 ரூபாயும் குறைந்து பெரும் சரிவைச் சந்தித்தது.

இந்த விலைச் சரிவின் தொடர்ச்சியாக, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ரூ. 1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 50 குறைந்து, ரூ. 13,150-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 குறைந்து ரூ. 235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5,000 குறைந்து ரூ. 2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து குறைந்து வரும் விலை, நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்குப் பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.