உங்கள் முக அழகை அதிகரிக்க தூக்கி எறியப்படும் ஆரஞ்சு தோலே போதும்..!

Feb 16, 2024 - 07:40
 0  4
உங்கள் முக அழகை அதிகரிக்க   தூக்கி எறியப்படும் ஆரஞ்சு தோலே போதும்..!

ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் அதை வைத்து சூப்பரான முக அழகை அதிகரிக்கக் கூடிய பல குறிப்புகளையும் இப்பதிவில் பார்ப்போம்.

ஆரஞ்சு பவுடர்

ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து பவுடராக்கி அதை ஒரு காற்று புகாத  டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரஞ்சு தோலை வெறுமையாக பயன்படுத்தக் கூடாது. அது தோலுக்கு எரிச்சலை கொடுக்கும். மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறைகள்

  • ஆரஞ்சு பழத் தோல் ஒரு ஸ்பூன், பாதாம்  பவுடர் ஒரு ஸ்பூன், பால் சேர்த்து முகத்தில் பூசி  20 நிமிடம் கழித்து கழுவினால் கிளியர் ஸ்கின்  கிடைக்கும். கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.
  • ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் தயிரை கலந்து   சருமத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் மறையும் முகம் நல்ல கலராக மாறும்.
  • ஆரஞ்சு தோல் மற்றும் சர்க்கரை, தேன் இவற்றை கலந்து முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கி முகம் பிரகாசமாக இருக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இம்முறையை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஆரஞ்சு தோலுடன் பால்  சேர்த்து முகத்தில் தடவி  15 நிமிடம் வைத்து குளிர்ந்த நீரால் கழிவினால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.
  • வேப்ப இலை பேஸ்ட் , ஆரஞ்சு தோல் பவுடர் , தேன், தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பரு வராமல் தடுக்கும் சருமம் பொலிவுடன் காணப்படும். எண்ணெய்  சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
முகப்பரு இருக்கும்போது இந்த ஆரஞ்சு தோல் பவுடரை பயன்படுத்த வேண்டாம் இது மேலும் எரிச்சலை உண்டாக்கும்.

ஆகவே முக அழகிற்காக பல ரசாயனம் கலந்த க்ரீம்களையும் , பவுடர்களையும் பயன்படுத்தினால்  விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும். இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். எனவே இயற்கையாக கிடைக்கக்கூடிய பழச்சாறு மற்றும் நாம் தூக்கி எறியப்படும் பழத்தின் தோல்  போன்ற இயற்கையான பொருட்களை வைத்தே நம் அழகை பராமரித்துக் கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow