எங்கள் அரசு மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பு… துபாயில் பிரதமர் மோடி பேச்சு!

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில், இன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அழைப்பு விடுத்தார்.

பிரதமர் பேசியதாவது, வளரும் நாடுகளின் கவலைகளையும், உலகளாவிய தெற்கின் பங்கேற்பையும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதே எனது மிகப்பெரிய கொள்கையாகும். மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச அரசு தலையீட்டை உறுதி செய்வது அரசின் வேலை.

துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு

குடிமக்களிடம் தொழில் மற்றும் ஆற்றல் உணர்வு வளரும் சூழலை உருவாக்குவதை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். கொரோனாவுக்கு பிறகு மக்கள் அரசு மீது நம்பவில்லை என்று நாங்கள் நிறைய கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால், இந்தியாவில் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக பார்க்கிறோம். கடந்த ஆண்டுகளில், இந்திய அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

தங்களது அரசின் நோக்கம் மற்றும் அர்ப்பணிப்பு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்ததால் இந்த நம்பிக்கை பெருகியுள்ளது. மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுகிறோம். மக்களின் தேவைகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்ற அணுகுமுறையுடன் நாங்கள் நகர்ந்து வருகிறோம். உணவு, சுகாதாரம், நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

Leave a Comment