ஸ்டாலின் எப்படியாவது தடுத்து நிறுத்த பார்க்கிறார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

திமுகவினர் எப்படி தடுத்து நிறுத்த நினைத்தாலும் பொங்கல் பரிசு திட்டத்தினை கொண்டு போய் சேர்ப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரூ.2500 டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கவும், அதிமுகவினர் வழங்கக்கூடாது என திமுக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என  சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் … Read more

நீங்க மாறவே இல்லை, அப்படியே தான் இருக்கீங்க!

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாரியின் மனைவி அவரது கணவரிடம் நீங்கள் மாறவே இல்லை அது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார். இன்றுடன் 88 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்குக்காக ஷிவானியின் அம்மா, அஜீத், ரம்யா, கேபி ஆகியோரின் அம்மா ரியோவின் மனைவி மற்றும் பாலாஜியின் சகோதரர் ஆகியோர் வந்து சென்று விட்டனர். இந்நிலையில், தற்பொழுது ஆரியின் மனைவி மற்றும் குழந்தை … Read more

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி  முன்னோட்டம் அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 பகுதிகளாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்தியாவில் நான்கு  தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்து செல்லப்படும்..? … Read more

புத்தாண்டு பரிசு..! ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ்கால் மீண்டும் இலவசம்..!

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ்  ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு அனைத்து வாய்ஸ்கால்களும் ஜனவரி 1 முதல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கு ஜியோ நிமிடத்திற்கு 6 பைசா  கட்டணம் வசூலித்தது, ஆனால் தனது ஜியோ நெட்வொர்க்கில் உள்ள அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், ஜியோ வாய்ஸ்கால் கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மதித்து, ஜியோ மீண்டும் அனைத்து வாய்ஸ் … Read more

2021 New Year Eve: 2020-க்கு “குட் பை” சொல்லி, 2021-ஐ வரவேற்கும் கூகுள்!

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் புதிய அனிமேஷன் டூடுலை உருவாக்கியுள்ளது. 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத வருடமாகும். ஆனால் தற்பொழுது இந்த 2020 முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் இருக்கவுள்ளதால், உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினான கூகுள், 2021 பிறக்கவுள்ளதையடுத்து புதிய டூடுலை உருவாக்கியது. அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year’s Eve) என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் google.com … Read more

பாமக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றம்!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம். பாமக பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவை நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு பற்றி முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம், தமிழக … Read more

தலைவர்கள்தான் அப்படி, தொண்டர்கள் இல்லை – அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுக தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர். ஆனால் அதிமுக தொண்டர்கள், எங்கும் செல்லாமல் உறுதியாக கட்சிலேயே உள்ளனர். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. … Read more

பாகிஸ்தானில் தீ வைத்து, இடித்து இந்து கோயில் தகர்ப்பு..!

இந்த நேரத்தில் உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. ஆனால், புதிய ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாகிஸ்தானில் இந்துக்களின் ஒரு கோயில் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக, மக்களிடையே அதிருப்தி அதிகரித்து உள்ளது. இது குறித்த வீடியோவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த மாநிலமாக கூறப்படும் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் நேற்று ஒரு குழு இந்து கோவிலை உடைத்து பின்னர் எரித்தனர் என … Read more

நேரடி விவாதம் நடத்த முதல்வர் தயாரா? – தயாநிதி மாறன் சவால்

ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். தமிழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் பெரியார் தெருவில் அதிமுகவை நிராகரிக்கிறோம் தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் … Read more

தெலுங்கானாவில் மதுபானக் கடைகள் இன்று நள்ளிரவு வரை திறக்க அனுமதி.!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தெலுங்கானாவில் இன்று நள்ளிரவு வரை மதுபான கடைகள் திறந்திருக்கும் என்று மாநில தடை மற்றும் கலால் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகள் வழக்கமாக இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நிலையான நடைமுறைகளை கடைபிடிப்பதற்கு இத்தகைய அனுமதி உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொது ஒழுங்கு மற்றும் … Read more