கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் – தலைமைச் செயலாளர்

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் கலந்துகொண்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்படுவது கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.

வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியது, இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவு பெற்றது. ஜெ.தீபா, ஜெ.தீபக் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து. ஜெயலலிதா வாரிசான தன்னிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர் ஜெ.தீபக் தெரிவித்துள்ளார்.

ஒப்புதலே அளிக்காத போது ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என ஜெ.தீபா தனது வாதத்தை முன்வைத்தார். அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே நிலம் கையகப்படுத்தப்பட்டது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது, தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#BREAKING: 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்

9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். பின்னர் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு முன்பாக தமிழக அரசு எந்த கலந்தாலோசனையும் செய்யவில்லை என்றும் அரசியல் நோக்கத்தையும், தேர்தலையும் கருத்தில் கொண்டு தான் அறிவித்துள்ளது. எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் ஆர்கே நந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி தலைமையிலான இந்த வழக்கு விசாணையின்போது, 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், 10ல் 11ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்தி தேர்வு செய்யலாம் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அந்த பள்ளிகள் வெளியிட வேண்டும் என கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

#Breaking: தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்று தலைமை செயலாளர் அறிவிப்பு.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வரும் திங்கள் கிழமை முதல் 9,10,11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.

9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன்/ டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 12ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொத்தேர்வை எழுத வேண்டியதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அறக்கட்டளை – அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

chennai high court

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தீபக் தொடர்ந்து வழக்கோடு தீபாவின் வழக்கும் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்குகளும் விசாரிக்கப்படுகிறது.

மீண்டும் ஊரடங்கா? கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்.!

Health Secretary Radhakrishnan

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிப்பு என்கிற நிலை கவலையளிக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தவறாமல் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருமணங்கள், பிறந்தநாள் விழா, இறுதி சடங்கு போன்றவைகள் நோய் பரவ காரணமாக இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை. பொது மக்களிடையே பெரும் கொரோனா பரவாது என்று அலட்சியம் இருக்கிறது.

அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனுமதி வழங்கப்பட்டவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அரசியல் கூட்டங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் எந்த கூட்டங்களும் நடத்த கூடாது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று சவாலாக உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் 16 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு, 20 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. நோய் தொற்று குறைவாக உள்ளவர்கள் வீட்டு தனிமை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா., மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் நிச்சயம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து ஒரு நாள் பாதிப்பு 800-ஐ தாண்டி வருகிறது. கடந்த ஆண்டை போல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிககைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதில், வங்கிகள், பள்ளிகளிலும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபம்கள், சுற்றுலா தலங்களை அரசுத்துறைகள் கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மக்கள் கூடும் இடங்கள், பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்களில் கிருமி நாசினி மற்றும் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும்.  காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும். முககவசம் இன்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்றதே கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பாதாள சாக்கடை மரணம் – மாநகராட்சி, நகராட்சியே பொறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்

பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு.

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என கூறியுள்ளது.

மரணங்கள் நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவர் என தெளிவுப்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் புலன் விசாரணையை துரிதப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு 3 வாரங்கள் கெடு விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனிதத்தன்மையற்றது – உயர்நீதிமன்றம்

chennai high court

கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயல் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறை தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

#BREAKING: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – தடை விதிக்க மறுப்பு

chennai high court

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு ஒருபக்கம் எதிர்ப்பும் மறுபக்கம் அனைத்து சமூகத்திற்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்ட பிறகு தான் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதுகுறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடைகோரி திண்டுக்கல் விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அணையிட்டுள்ளார். தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.