உ.பி.,யில் வகுப்பறையில் மாணவனை சுட்டுக் கொன்ற சக மாணவர்..!

உத்தரபிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு மாணவரை சகமாணவரே சுட்டுக்கொன்றார். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு  படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே உட்காரும் இடத்திற்காக நேற்று சண்டைபோட்டுள்ளனர். இதனால் கோப்படைந்த ஒரு மாணவர் வீட்டில் இருந்து துப்பாக்கி எடுத்து வந்து சகமாணவரை சுட்டுக்கொன்றார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு சிறுவர்களும் 14 வயது என்றும், நேற்று வகுப்பில் உட்காரும் இடத்திற்காக சண்டையிட்டனர். அவர்களில் ஒருவர்  மிகவும் கோபமடைந்தார். இதனால், அவர் தனது மாமாவின் துப்பாக்கியை பள்ளிக்கு … Read more

#BREAKING: தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்..!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சீவி பானர்ஜி தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார். சென்னை உயர்நீதி மன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவி பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

நியூசிலாந்தில் பிறந்தது 2021 புத்தாண்டு – வாணவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகம்.!

நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது, வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர். உலகம் முழுவதும் புது வருடத்தை வரவேற்க காத்திருக்கும் நிலையில், முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என கோஷமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இன்னும் சில மணி … Read more

ஆந்திரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம்.!

ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி இன்று சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு அதன் புதிய தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகேஸ்வரி உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களின் நான்கு தலைமை நீதிபதிகளை சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு எஸ்சி கல்லூரி சமீபத்தில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. முன்னோடியில்லாத வகையில், ஆந்திர மாநில முதல்வர், அக்டோபர் 6 ம் தேதி, இந்திய தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) எஸ் ஏ போப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார், ஜனநாயக … Read more

வழிபாட்டு தளங்களுக்கு நேரக்கட்டுப்பாடு தளர்வு -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது அமலில் உள்ள பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் அடுத்த மாதம் 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து வழிபாட்டு தலங்களிலும்  வழக்கமான நேர கட்டுப்பாடு பின்பற்றி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க்கப்படுவதாக … Read more

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தபடி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக … Read more

#BREAKING: காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை.!

காணும் பொங்கல் அன்று கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை ,தற்போது உள்ள ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தொடரும். தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் … Read more

#BREAKING: மாநில மனித உரிமை ஆணையம் தலைவர் நியமனம் – தமிழக அரசு

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.பாஸ்கரனை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளனர். தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த … Read more

“முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லி கொடுத்துவிட்டு பேசுங்கள்” – திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு

“முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லி கொடுத்துவிட்டு பேசுங்கள்” என திருச்சுழி தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளதால், அதற்கான பணிகளை அனைத்து கட்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, “முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லிக்கொடுத்துவிட்டு பேசுங்கள்” என கருத்து தெரிவித்தார். மேலும், சேக்கிழார் ஆட்சியில் … Read more

#BreakingNews: ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஆகவே கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் பழனிசாமி … Read more