2021 New Year Eve: 2020-க்கு “குட் பை” சொல்லி, 2021-ஐ வரவேற்கும் கூகுள்!

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் புதிய அனிமேஷன் டூடுலை உருவாக்கியுள்ளது.

2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத வருடமாகும். ஆனால் தற்பொழுது இந்த 2020 முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் இருக்கவுள்ளதால், உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினான கூகுள், 2021 பிறக்கவுள்ளதையடுத்து புதிய டூடுலை உருவாக்கியது. அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year’s Eve) என பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி நீங்கள் google.com என அடித்தால் அதன் டூடுல் உங்களுக்கு தெரியும். அதில் வீடு போன்ற அமைப்பும், அந்த வீட்டில் 2020 என்ற கடிகாரமும், பட்டாசு பல்புகளால் அலங்கரிக்கப்பட்டருக்கும். அந்த டூடுலை க்ளிக் செய்தால், உங்களை “New Year’s Eve” என்ற பக்கத்திற்கு செல்கிறது.

new year doodle

அதற்குள் சென்றவுடன், கலர் கலராக பேப்பர் விழுவது போல இருக்கும். அதுமட்டுமின்றி, அந்த பக்கத்தின் கார்னரில் பார்ட்டி கோன் ஒன்று உள்ளது. அதை கிளிக் செய்தால் “பாப்” என்ற சத்தத்துடன் கலர் பேப்பர்கள் பறக்கின்றது. மேலும் அந்த பக்கத்தில் புத்தாண்டு தொடர்பான செய்திகள் இருக்கின்றது. உலகளவில் இந்த புத்தாண்டு தினம், முதல் முதலாக நியூஸிலாந்து நாட்டில் கொண்டாடப்படுகின்றது. அதன்பின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படுவது, குறிப்பிடத்தக்கது.