விஷாலை கடுமையாக சாடிய இயக்குநர் பவித்திரன்!

இயக்குனரும், தயாரிப்பாளருமான பவித்திரன், தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு மாறாக நாளை தனது தாராவி படத்தை வெளியிட உள்ளதாக  கூறியுள்ளார். தாராவி என்ற தமது புதிய படத்தை திட்டமிட்டபடி நாளை தமிழகம் முழுவதும் உள்ள 150 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருப்பதாக பவித்திரன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் சங்கத்தின் கிளை போல விஷால் நடத்ததுவதாக சாடியிருக்கும் பவித்திரன் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைகள் குறித்தும், விஷாலின் தன்னிச்சையான போக்கு … Read more

முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கைத்தறி நெசவாளர் சங்கங்கள் ஊக்கத் தொகை பெற புதிய நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு  கடிதம் எழுதியுள்ளார். தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற இதற்கு முன் நிபந்தனைகள் ஏதுமில்லாத நிலையில், தற்போது ஆண்டு பரிவர்த்தனை 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஊக்கத் தொகை பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே … Read more

15 பேர் எகிப்தில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில்  பலி!

15 பேர் எகிப்தில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில்  பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மினா செய்தி நிறுவனம், “எகிப்தின் பெஹிரா மாகாணத்தில் புதன்கிழமையன்று பயணிகள் ரயிலிருந்து இரு பெட்டிகள் தனியாக கழன்று சரக்கு ரயில் மீது மோதியது இதில் பயணிகள் பெட்டியிலிருந்து 15 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் முழு விவர அறிக்கையை அளிக்குமாறு எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் போக்குவரத்து அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். எகிப்தில் … Read more

விராத் கோலி எங்களுக்கு வேண்டும்! பாகிஸ்தான் ரசிகர்கள் அன்பு கோரிக்கை…

பாகிஸ்தான் ரசிகர்கள் அன்பு கோரிக்கை, பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவதை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தொடர்ச்சியான ரன் குவிப்பால் உலக முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கிறார். அதனை உணர்த்து வகையில் பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று, பாகிஸ்தான், பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற சர்வதேச வீர்ர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்தி … Read more

பல்வேறு தலைவர்கள் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் நேரில் வாழ்த்து!

சென்னையில் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு  மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடம், சென்னை எழும்பூர், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களில் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் ஆகியோரை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுக்கு அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, … Read more

அமலாக்கத்துறை அதிரடி !நீரவ் மோடியின் உறவினர் சொத்துகள் முடக்கம்……….

அமலாக்கத்துறை நீரவ் மோடியின் தாய்மாமன் மெகுல் சோக்சிக்குச் சொந்தமான ஆயிரத்து 217கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை  பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியில் உத்தரவாதக் கடிதம் பெற்றுப் பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த வைர வணிகர்களான நீரவ் மோடி, அவர் தாய்மாமன் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குச் சொந்தமான வீடுகளிலும், நிறுவனங்களிலும் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், தங்க … Read more

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்…..

வானிலை ஆய்வு மையம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்  வரும் கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும் என  தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் வெப்பநிலை எப்படி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்கமாகக் கோடைக்காலங்களில் இருந்ததைவிட இந்த ஆண்டு வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் … Read more

மடத்தின் பாரம்பரிய ஐதீக முறைப்படி ஜெயேந்திரரின் உடல் அடக்கம்!

இன்று காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரரின் உடல் அடக்கம் மடத்தின் பாரம்பரிய ஐதீக முறைப்படி  நடைபெற்றது. 83 வயதான ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் அவரது உடல் காஞ்சி மடத்தில் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் உடல் கூடத்திற்கு கொண்டுவரப்ப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் … Read more

பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடக்கம்!

இன்று 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கிய நிலையில்  தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்று வருகிறது. 9 லட்சத்து 7 ஆயிரத்து 20 மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் புதுவையில்  தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 689 பேர் தனித் தேர்வர்கள். தமிழ் முதல் தாள் தேர்வு தவிர அவரவர் மொழிப்பாடங்களை எடுத்த மாணவர்களும் அந்தந்த மொழிப் பாடத் தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 794 மையங்களும் சென்னையில் மட்டும் 156 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. … Read more

களைகட்டத் தொடங்கிய ஹோலி(Holi) பண்டிகை!

ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியில்  தங்கள் வெள்ளையாடையின் மீது வண்ணங்களைப் பூசிக் கொள்ளத் துணிந்தனர். வண்ணங்களின் விழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய அவர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து தங்கள் வெள்ளைப் புடைவைகளை வண்ணமயமாக்கினர். ஆடல் பாடல் கொண்டாட்டம் என்று வடமாநிலங்களில் ஹோலிப் பண்டிகை களைகட்டத் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் நாளைய தினம் ஹோலி கொண்டாடப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.