#BREAKING: ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அறிவிப்பு காரணமாக வீடு, வாகனங்கள் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: கடன் வட்டி விகிதம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை அறிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% உயர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளார். அதாவது, வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6.25% லிருந்து 6.50% ஆக உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். … Read more