வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்…..

வானிலை ஆய்வு மையம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்  வரும் கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும் என  தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் வெப்பநிலை எப்படி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்கமாகக் கோடைக்காலங்களில் இருந்ததைவிட இந்த ஆண்டு வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் பகல்பொழுதில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

இவை தவிர ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரத்தின் விதர்ப்பா, மராத்வாடா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் கேரளம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அரை டிகிரியில் இருந்து ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment