அமலாக்கத்துறை அதிரடி !நீரவ் மோடியின் உறவினர் சொத்துகள் முடக்கம்……….

அமலாக்கத்துறை நீரவ் மோடியின் தாய்மாமன் மெகுல் சோக்சிக்குச் சொந்தமான ஆயிரத்து 217கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை  பறிமுதல் செய்துள்ளது.

பஞ்சாப் நேசனல் வங்கியில் உத்தரவாதக் கடிதம் பெற்றுப் பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த வைர வணிகர்களான நீரவ் மோடி, அவர் தாய்மாமன் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்குச் சொந்தமான வீடுகளிலும், நிறுவனங்களிலும் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், தங்க நகைகள், கார்கள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஏற்கெனவே பறிமுதல் செய்துள்ளனர். அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நீரவ் மோடியின் தாய்மாமன் மெகுல் சோக்சிக்குச் சொந்தமான ஆயிரத்து 217கோடியே 20லட்ச ரூபாய் மதிப்புள்ள 41அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பையில் 15அடுக்குமாடிக் குடியிருப்புகள், 17 அலுவலக வளாகங்கள், ஆந்திரப் பிரதேசத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஐதராபாத் ஜெம்ஸ் ஆகியவை இவற்றில் அடங்கும். கொல்கத்தாவில் ஒரு வணிக வளாகம், அலிபாக்கில் ஒரு பண்ணை வீடு, மகாராஷ்டிரம், தமிழ்நாடு மாநிலங்களில் அமைந்துள்ள 231 ஏக்கர் நிலம் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment