பல்வேறு தலைவர்கள் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் நேரில் வாழ்த்து!

சென்னையில் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு  மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடம், சென்னை எழும்பூர், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களில் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் ஆகியோரை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுக்கு அவரது மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுக்கு வழத்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment