“திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல” – அமைச்சர் சேகர்பாபு!

நாமக்கல்:திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது. மேலும்,கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.குறிப்பாக,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு … Read more

தந்தைக்கு போட்டியாக மகன் கட்டிய கோவில்! கங்கை கொண்ட சோழபுரத்தின் தனி சிறப்புகள்!

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் உள்ள கோவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலையம் தான். இந்த கோவிலை கட்டியவர் மாமன்னர் ராஜராஜனின் மகன்  மாமன்னர் ராஜ ராஜேந்திரன்.  தஞ்சை பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடையே பெரிய ஒற்றுமை தொடர்பு ஒன்று உண்டு. அதாவது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜனின் மகன் ராஜ ராஜேந்திரன் தான் கங்கைகொண்ட சோழபுரத்ததில் உள்ளபிரகதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார். தன் தந்தை கட்டிய கோவிலை விட இந்த கோவிலில் உள்ள … Read more

பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷத்துடன் 2,668 அடி உயரத்தில் திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தீப திருவிழா தொடங்கியது.  இன்று திருவண்ணமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இன்று முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றும் விழா நடைபெற்றுவருகிறது. இதனை காண திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் … Read more

பிரம்மனுக்கு பாடம் கற்ப்பித்த முருகன்! உடல் நலம், கல்வி, வேலை என சகலமும் அருளும் திருத்தலம்!

பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை மறந்த பிரம்மனுக்கு இந்த தலத்தில் தான் முருகன் அதனை கற்பித்தார்.  இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் குரு தோஷம், கண் பிரச்சனைகள், உடல் நலம், கல்வி என சகலமும் சரியாகிவிடும்.  திருவாரூர் மாவட்டம் என்கண் எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. சிவன் கோவிலாக இருந்தாலும் இந்த கோவிலில் முருகனுக்கு தான் தனிச் சிறப்பு உண்டு. அந்த சிறப்புக்கு என்று தனி வரலாறு உண்டு. நாம் மிகவும் கேட்டு பழகிய அந்த புராண வரலாறு … Read more

தென் கைலாயம் உச்சி பிள்ளையார் கோவில் வரலாறு! தலையில் குட்டு வாங்கிய விநாயகர்!

திருச்சி மைய பகுதியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. இந்த உச்சி பிள்ளையார் கோவில் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு கீழ்பகுதியில் மாணிக்கவிநாயகரும், உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், நடுப்பகுதியில் சிவன் தாயுமானவராகவும் தரிசனம் தருகின்றனர். இந்த கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது. இந்த கோவில்தான் தெற்கு கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், விபீஷணர், ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டு அங்கிருந்து ரங்கநாதர் சிலையை கையில் எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கி தனது … Read more

முருகப்பெருமானும் காதல் மனைவி வள்ளியும் சம உயரத்தில் இருக்கும் அதிசய தீர்த்தகிரி சிறப்புகள்!

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை நோக்கி முருகப்பெருமான் செல்லும்போது சற்று களைப்பாக இருந்ததால் இளைப்பாறி சென்ற இடம்தான் வேலூர் தீர்த்தகிரி சன்னிதானம். இங்கே முருகன் இளைப்பாறி சென்றதற்கான பாதச்சுவடுகள் கோயில் மலையடிவாரத்தில் தற்போதும் காணப்படும். இந்த கோயில் சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரி கோவிலில் மலையடிவாரத்தில் விநாயகர் சன்னதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அதற்கு எதிரே கோவில் திருக்குளம் அமைந்துள்ளது. அதனருகே 222 படிகள் … Read more

திருமண தடைகள் நீங்கி செல்வம் பெருக வீட்டில் ஒரு துளசி செடி போதும்!

வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம். இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும். துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து … Read more

தினமும் கடவுளை வணங்குபவர்களா நீங்கள்! மறக்காமல் இதனையெல்லாம் கடைபிடிக்கவும்!

நமது அன்றாட வாழ்வில் தினமும் ஒரு நிமிடம் கடவுளை வாங்குவது மிகவும் நல்லது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தினமும் தியானம் செய்வது சிறந்தது. காரணம் காலையில் நமது மனது மிக புத்துணர்ச்சியாக இருக்கும். அப்போது நாம் அன்று என்ன செய்யவேண்டும் எனவும், இன்று நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் எனவும்  நமக்குள் கூறிக்கொண்டால் நமது மூளை அதற்காக நம்மை தயார்படுத்த ஆரம்பித்துவிடும். அதனால் தான் பெரியவர்கள் தினமும் கடவுளை வாங்குவதையும், தியானம் செய்வதையும் வழக்கமாக செய்து வந்தனர். காலையில் … Read more

இன்றைய (06.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியமான நாள். வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இன்று மேலோங்கி இருக்கும். பிராத்தனை, தியானம் செய்வது அவசியம். ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள். உங்களின் மன உறுதி மற்றும் மன தைரியத்தால் எடுத்துக்கொண்ட காரியத்தில் சாதிக்கும் நாள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள். மிதுனம் : இன்று உங்களை நீங்களே சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையாமல் போவதற்கு … Read more

இன்றைய ராசிபலன் (ஏப்ரல் 7-ஆம் தேதி ) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்றைய (ஏப்ரல் 7-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் நாள் ஆகும். ரிஷப ராசிக்காரர்கள்:                      … Read more