பொதுத்தேர்வு தேதி…மாணவர்களுக்கு புதிய செயலி – அன்பில் மகேஸ்.!

anbil mahesh poyyamozhi

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் … Read more

எங்களுக்கு திருப்பி கொடுங்க – ஸ்டாலின் அதிரடி

  கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும்  தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, … Read more

மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியை பணியிடமாற்றம் ..!

மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியையை  பணியிடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவு. திருப்பூர் மாவட்டம் காரதொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் அந்த பள்ளியில் பயின்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது மகனிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவியை மருமகள் என உறவுமுறை கூறி அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து, தனது மகனிடம் பேசவில்லை என்றால், மதிப்பெண்ணில் கைவைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையயடுத்து, இது தொடர்பாக மாணவி … Read more

#BREAKING: அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் – நீதிமன்றம்

கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து.  மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் திறமை அடிப்படையில் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது என நீதிபதி மகாதேவன் கருத்து கூறியுள்ளார். கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் சூழ்நிலை நிலவுகிறது. கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ … Read more

இவர்களுக்கு கட்டணமில்லை! கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது – முதலமைச்சர்

2-ஆம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில்வதற்கு கட்டணமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு அமைச்சர் அறிவித்தார். கோரிக்கை வைக்காமலேயே … Read more

#BREAKING: மாணவர்கள் கவனத்திற்கு.. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு. தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை (ஜூன் 17 ஆம் தேதி) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து அரசுத் … Read more

மாணவர்களே ரெடியா இருங்க! முதல் நாளே இவற்றையெல்லாம் வழங்க ஏற்பாடு!

வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், … Read more

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு இந்த வகுப்புகள் தான் – அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தகவல். தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்டபடி … Read more

#JustNow: கல்வி அமைச்சர்கள் மாநாடு – தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு. குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் … Read more

தனது சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களுக்கு வழங்குகிறேன் – ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் தனது ராஜ்யசபா சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதன்பின், பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் போட்டியிட்ட நிலையில், ஹர்பஜன் … Read more