திருவண்ணாமலையில் இன்று மஹா தீபம் ஏற்றம்..!

திருவண்ணாமலை திருவிழாவில் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி   கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், விழாவின் கடைசி நாளான இன்று, இந்த நிலையில் இன்று பஞ்சபூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கருவறை எதிரில் பரணி தீபம் … Read more

கார்த்திகை தீப திருவிழா – 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ  10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட … Read more

சென்னையில் இன்று தொடங்குகிறது குறுநாடக திருவிழா…!

சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு 10 நிமிட நாடகங்களின் திருவிழா தொடங்கியது. இந்த குறு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் குறு நாடக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழா, வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த … Read more

பழனி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று மதியம் வரை அனுமதி…!

பழனி மலைக்கோயிலுக்கு செல்ல இன்று மதியம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கடந்த செப்.26 ஆம் தேதி பழனி மலைக்கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா துவங்கியது. இன்று  உச்சிகால பூஜை மதியம் 12:00 மணிக்கும், சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடக்கிறது. மேலும், காலை 11:00 மணிக்கு கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். மதியம் 2:45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு மலைக்கோவில் சன்னதி திருக்காப்பிடப்படும். பீச் ரோடு, படிப் பாதை வழியாக மதியம் … Read more

பண்டிகை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு…!

பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு.  ஆயுதபூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது பொழுதுபோக்கை களிப்பர். இந்த நிலையில், நாளை விடுமுறை தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்டலூர், அறிஞர் அண்ணா … Read more

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமல்…!

இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.  சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் … Read more

ஹாலோவீன் திருவிழாவில் “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” ஸ்டாச்சு வைரலாகும் வீடியோ!!

அமெரிக்காவில் கொண்டாடப்படும் விசித்திரமான ஹாலோவீன் திருவிழாவில் “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” ஸ்டாச்சு வைரலாகும் வீடியோ!! அமெரிக்காவில் மிகவும் வேடிக்கையான மற்றும் விசித்திரமான பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீன் கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் தங்கள் ஆடைகள் மற்றும் பயமுறுத்தும் அலங்காரங்களை உருவாக்க பலரும் பல விதமான யோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, நெட்ஃபிக்ஸ் தொடரான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4″ஐ இன்ஸ்பைர் செய்யும் வகையில் அதில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான மேக்ஸ், வில்லன் வெக்னாவின் மயக்கத்திற்கு உட்பட்டு … Read more

பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்…! என்ன காரணம்…?

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம்.  சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. திரு.வி.க. பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி சாலை வழியாக செல்லலாம். 7-வது அவென்யூ மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பில் … Read more

கோலாகலமாக தொடங்கிய தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 440-வது திருவிழா..!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி  விழா நடைபெற்றது. இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவானது வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு … Read more

‘காலம் எவ்வளவு வேகமாக கடக்கிறது’ – ஊர் மக்களுடன் இணைந்து நடனமாடிய அமைச்சர் சக்கரபாணி…!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனமாடிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வேலுசாமி உடன் இணைந்து அமைச்சர் சக்கரபாணி நடனம் ஆடினார். கிராம மக்களின் அன்பு கோரிக்கையை ஏற்று இருவரும் டான்ஸ் ஆடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களை மகிழ்வித்தனர். இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தனது ட்விட்டர் … Read more