நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு!

நாளை நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வெளியீடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது . ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள நடிகர் ரஜினியின் காலா படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலா டீசர் வெளியீட்டை ஒத்தி வைத்திருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட இருந்த காலா படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் பதவி விலகல்!

ஹோப் ஹிக்ஸ் (Hope Hicks) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆலோசகரும், வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குனருமான இவர்  பதவி விலகினார். அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணை, அதிபர் அலுவலகமான ஓவல் வரை தீவிரம் அடைந்துள்ளது. இதுகுறித்து ஹோப் ஹிக்ஸ்-இடம் ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தியது. இதை அடுத்தே பதவி விலகல் முடிவை ஹிக்ஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 3 ஆண்டுகளாக டிரம்புடன் இணைந்து பணியாற்றிய ஹோப் ஹிக்ஸ், தமது பதவி விலகல் … Read more

கொலைவழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு வலைவீசும் போலீஸ்..!

நாடார்மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராக்கெட் ராஜா உள்ளிட்ட 9 பேரை நெல்லையில் கொடியன் குளம் குமாரின் மருமகன் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக   காவல்துறையினர் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம் கொடியன்குளத்தை சேர்ந்தவர் குமார். அதிமுக பிரமுகரான இவர் பாளையங்கோட்டை அடுத்த அண்ணா நகரில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது மருமகன் செந்தில் குமாரிடம் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று குமார் மீது வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்றது. கொடியன் குளம் குமார் … Read more

ஏர்செல்லிலிருந்து நெட்வொர்க் கிடைக்காத போதும் வேறு சேவைக்கு மாறுவது எப்படி?

நெட்வொர்க் கிடைக்காத போதும் ஏர்செல் மொபைல் வைத்திருப்பவர்கள்  வேறு சேவைக்கு மாறலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் செல்போனில் நெட்வொர்க் செட்டிங் எனும் பகுதிக்கு சென்று நெட்வொர்க் தேர்வை ஆட்டோமேட்டிக் என்பதிலிருந்து மேனுவல் என மாற்ற வேண்டும். இதன் பின்னர் சேவை நிறுவனத்திற்கான தேர்வை ஏர்செல்லிலிருந்து ஏர்டெல் 2G என தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் 10 இலக்க மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.  இதற்கு பதிலாக கிடைக்கும் யுனிக் போர்டிங் கோடு(Unique … Read more

புல்லட் ரயிலுக்கான நிலம் தயார்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தொடங்க உள்ள புல்லட் ரயிலுக்கான  நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா அரசு இந்த நிலத்தை ஹைஸ்பீட் ரயில்வே கார்பரேசன்  நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே பல திட்டங்கள் விரைவாக நிறைவேறி வருவதாகவும் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆட்சிக்காலங்களில் தொடங்கப்பட்ட சில திட்டங்கள் 25 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்த … Read more

தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதி !புதிய திரைப்படங்களுக்கு சிக்கல் …..

தயாரிப்பாளர்கள் சங்கம் , இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய தமிழ்த்திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. டிஜிட்டல் வடிவிலான திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர். இந்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டபடியே இன்று முதல் எந்தப் படமும் வெளிவராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் … Read more

போலார் கரடிகளுக்கு சர்வதேச பனிக்கரடிகள் தினத்தை முன்னிட்டு மீன்கள் விருந்து!

சர்வதேச போலார் கரடிகள் தினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ வனவிலங்குப் பூங்காவில்  கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, போலார் கரடிகளுக்கு 10 மூட்டை மீன்கள் விருந்தாக வழங்கப்பட்டன. தொட்டியிலும் குளத்திலும் நீந்திய மீன்களை பனிக்கரடிகள் லாவகமாக பிடிப்பதும் கவ்விச் செல்வதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. வனவிலங்கு பூங்காவில் உள்ள மூன்று போலார் கரடிகளுக்கு மாதந்தோறும் மீன்கள், இறைச்சி போன்றவை வழங்கப்படுவதாக அங்குள்ள நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!

சரக்கு லாரியில்  தூத்துக்குடி அருகே தீப்பிடித்ததில் 40 டன் கோதுமை மூட்டைகளுடன், லாரி எரிந்து சேதமடைந்தது. தூத்துக்குடியில் இருந்து 40 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி அருப்புக்கோட்டைக்கு புறப்பட்டது. அப்போது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் முன்பக்க சக்கரம் வெடித்ததால் தீப்பிடித்தது. லாரியில் தீ பரவத் தொடங்கியதும், ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தி வைத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை … Read more

நான் கடைசிவரை தொண்டனாக இருக்கவே விருப்பம்!

நடிகர் உதயநிதி ஸ்டாலின்  எம்.எல்.ஏ பதவி ஏதும் தேவை இல்லை என்றும் தொண்டர்களில் ஒருவராக இருக்கவே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அ வர், ஸ்டாலினின் அரசியல் வாரிசாக தாம் வரவில்லை என்றும் சாதாரண தொண்டனாக இருக்கவே விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஒவ்வொரு இந்தியரின் கனவு காராக விளங்கும் மாருதி ஆல்டோ!விற்பனையில் புதிய சாதனை …..

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ இந்தியாவின் கனவு காராக விளங்கி வரும் நிலையில் , விற்பனையில் 35 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் புதிய புதிய கார் நிறுவனங்கள் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. எனினும் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார் விற்பனை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்டோவிற்கு தொடர்ந்து வரவேற்பு உள்ளது. இந்திய நடுத்தரக் குடும்பத்தின் விருப்பமிக்க காராக இது விளங்குகிறது. குறைவான … Read more