12 மணி நேர வேலை...தொழிலாளர்கள் என்ன இயந்திரமா.? இபிஎஸ் கடும் விமர்சனம்..!

Apr 23, 2023 - 08:22
 0  2

தொழிலாளர்கள் 12 மணி நேரம் எவ்வாறு பணி செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். 

தமிழக அரசு தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. இந்த மசோதா தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டம் தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை  கொண்டுள்ளது.

இதனால், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்த சட்டம் குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 12 மணி நேரம் வேலை பார்ப்பதற்கு தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், 8 மணி நேரம் பணி, 8 மணி நேரம் ஓய்வு மற்றும் 8 மணி நேரம் உறக்கம் இது இருந்தால்தான் ஊழியர்கள் சரியான மனநிலையில் பணி செய்யமுடியும் என்றும் அவர்கள் தொழிலாளர்களை ஸ்விட்ச் போட்டவுடன் இயங்கும் இயந்திரம் போல் நினைத்து விட்டார்கள் எனவும் கூறினார்.

மேலும், தொழிலாளர்கள் 12 மணி நேரம் எவ்வாறு பணி செய்ய முடியும். இது இயந்திர வாழ்கை அல்ல மனித வாழ்கை. இருந்தும் திமுகவின் கூட்டணி கட்சிகளே முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றும் முன்னதாக, மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது இந்த சட்டத்தை எதிர்த்தார் ஆனால் தற்பொழுது ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைமையாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow