விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி தான் – பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார்!

Radhika Sarathkumar : விஜய பிரபாகரன் எனக்கு ஒரு மகன் மாதிரி என்று விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமார் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, நடிகர் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்தது.

இதையடுத்து, விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதுபோன்று, அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி என்று ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் ராதிகா சரத் குமார் கூறியதாவது, விருதுநகர் தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை, பாஜக மேலிடத்தில் இருந்து தான் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டார்கள்.

இதனால் விருதுநகரில் நான் போட்டியிடுகிறேன். இருப்பினும், விருதுநகர் எங்களுக்கு ஒன்றும் புதுசு இல்லை. நிறைய முறை விருதுநகருக்கு பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறோம். காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபத்தும் கட்டியுள்ளோம், எங்களுக்கு இங்கு சொந்தங்கள் இருப்பதால், இங்கு அடிக்கடி வருவோம். அதனால், விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவது எங்களுக்கும் இன்னும் சந்தோசமாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் விருதுநகர் மக்களுக்கு நிறைய விஷயங்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தான் விருதுநகருக்கு வந்துள்ளோம் என்றார். இதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து ராதிகா கூறியதாவது, இந்த தொகுதிக்கு மாணிக்கம் தாகூர் இதுவரை எதுவும் செய்ததில்லை என கூறப்படுகிறது. அதுபோன்று, விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனும் போட்டியிடுகிறார்.

விஜய பிரபாகரன் என் பொண்ணுக்கு கூட படித்தவர். அவர் எனக்கும் ஒரு மகன் மாதிரித்தான். அதனால் சின்ன பையன் நல்ல இருக்கனும் அவ்வளவுதான் என கூறினார். மேலும் அவரை கூறியதாவது, நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இங்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். வீடுகள் கட்டி தர வேண்டும். தண்ணீர் வசதி, பட்டாசு தொழிலாளர்கள், வியாபாரம் உள்ளிட்டவைகளை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு விஷயங்கள் தான் இந்த தொகுதி வேட்பாளராக எனக்கு முக்கியமானதாக பார்க்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.